கவிதைமணி

வானமழை  நீயெனக்கு: அழகூர்.  அருண்.  ஞானசேகரன்

கவிதைமணி

வானமழை   நீயெனக்கு ,   வான்முகிலாய்    எனைநாடி
                வந்திட்டு   கருணைமழை   தனைபொழிய   வேண்டும் ;
        வளமையதைப்   பெருகிடும்   தேவதையாய்   நீவந்து
                வற்றாது    மகிழ்வூட்டும்   மனங்கொள்ள   வேண்டும் !
கானமதாய்   நீயெனக்கு   என்னாளும்   வாழ்வினில் 
                 கத்தும்குயி   லோசையென   மகிழ்வூட்ட   வேண்டும் ;
        கவிதையாய் , குழலதாய் ,  இன்னிசை   யாழதாய்
                 கருத்தினில்   என்னாளும்   நிலைகொள்ள   வேண்டும் !
தேனமுதம்   நீயெனக்கு   என்றாகி   வாழ்வெலாம்
                 தித்திக்கும்   சுவைகூட்ட   நான்மகிழ   வேண்டும் ;
        தென்றலாய்   என்வாசல்   தன்னில்நீ   வீசிவந்து
                 திளைப்பூட்ட   உன்விழிப்   பார்வையொன்று   போதும் !
ஆனமுத   லாகிவந்து   வளமதனைக்   கூட்டிட்டு
                 அனைவரும்   எனையறியும்   வகைசெய்ய   வேண்டும் ;
        அகிலமே   அறிந்திட   என்நிலையும்   உயர்ந்திட
                 அதிர்ஷ்டதே   வதையுன்னை   நானடைய   வேண்டும் !           

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

SCROLL FOR NEXT